டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 58 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து கடின இலக்கை துரத்திய லக்னோ அணியா டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அர்ஷத் கான் அதிரடியாக விளையாடவே லக்னோ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை போராடியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸிடம் தோல்வியை தழுவியது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் எங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். அவருக்கு ஏற்றவாறு எங்களிடம் சில திட்டங்களும் இருந்தன. ஏனெனில் எங்களுடைய இலக்கே எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அதனால் நாங்கள் நால்ல லெந்தில் மட்டுமே பந்துவீச வேண்டும் என்று யோசித்தோம். இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரே நாங்கள் நிறைய நம்பிக்கையுடம் இருந்தோம். அனால் சில வீரர்கள் காயமடைந்ததின் காரணமாக எங்களால் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறமுடியவில்லை.

கடைசி போட்டிக்கு பிறகும் நாங்கள் தற்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் நீடித்து வருகிறோம். முந்தைய ஆட்டத்தில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். தனிப்பட்ட முறையில் திரும்பி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஒட்டுமொத்தமாக எங்களுக்கு ரசிகர்களிடன் இருந்து கிடைத்த ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இதற்காக நான் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. ஏனெனில் நான் எப்போது களத்தில் இருக்க விரும்புவதுடன், அதனை தவறவிட விரும்பவில்லை” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News