கோலிக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின்!

Updated: Sun, Jan 16 2022 16:06 IST
Well Done Virat Kohli On The Headache You Have Left Behind For Your Successor: R Ashwin (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்வி அடைந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறு படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது. இதையடுத்து, விராட் கோலி, நேற்று தான் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவி்ப்பை திடீரென வெளியி்ட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் அஸ்வினுக்கும், கோலிக்கும் இடையே உரசல் இருந்து வருகிறது என்ற தகவல் வெளியானது. அதனால்தான் இங்கிலாந்து பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினை களமிறக்கவி்ல்லை, டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வினை விளையாடவைக்கவில்லை என்பதால், அஸ்வின், கோலி இடையே கிரிக்கெட்டைத் தாண்டிய தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

ஆனால், கோலி கேப்டன் ப தவியிலிருந்து விலகியதையடுத்து,அவரை உருக்கமாகப் பாராட்டி அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்த அஸ்வினின் பதிவில், “கிரிக்கெட்டில் கேப்டன்கள் எப்போதும், தங்களின் சாதனைகள், வெற்றிகள், தாங்கள் அணியை நிர்வகித்த விதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசப்படுவார்கள். ஆனால், கோலி கேப்டனாக நிர்வாகத்தது, கேப்டனுக்கென ஒரு தர அடையாளமாக இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தலைமை பெற்ற வெற்றியைப் பற்றி இனிவருவோர் பேசுவார்கள்.

வெற்றிகள் என்பது சாதாரணமாக போட்டியின் முடிவுகளாக இருக்கலாம். ஆனால், அறுவடைக்கு முன், விதைகளை சீராக, முறையாக எப்போதுமே விதைக்க வேண்டும். அந்த விதைகளை நீங்கள் நிர்வகித்தது, விதைத்தது ஒரு தரத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள், இதே எதிர்பார்ப்பு அடுத்துவருபவர்களிடமும் இருக்கும்.

 

உங்களுக்கு அடுத்து கேப்டனாக வருவோருக்கு உங்கள் சாதனைகளால் பெரிய தலைவலியை நீங்கள் விட்டுச் சென்றுவிட்டீர்கள் கோலி.அற்புதம். இதுதான் கேப்டனாக உங்களிடம் இருந்து நான் ஒருபாடமாக எடுத்துச் செல்கிறேன். நாம் ஒரு இடத்தைவிட்டு கண்டிப்பாக வெளியேத்தான் வேண்டும், ஆனால், அந்த இடத்தை அங்கிருந்து எதிர்காலம்தான் மேலே கொண்டு செல்லும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை