இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முத்ல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, துபாயில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மலபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்தவகையில் அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தா நிலையில், அடுத்து களமிறங்கிய முன்னணி வீராங்கனைகள் அனைவரும் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்ட்களை இழந்து பெவிலியானுக்கு நடையைக் கட்டினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர், ரோஸ்மெரி மெய்ர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட், “சரியாக என்ன நடந்தது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் இப்போது இன்னும் கொஞ்சம் புதியதாக இருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவில் இன்று நாங்கள் விளையாடவில்லை. ஏனெனில் இந்த ரன்னை எட்டக்கூடிய நிலையில் நாங்கள் இருந்தும், எங்களால் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தவறவிட்டு விட்டோம்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அதன்பின் 7-11 ஓவர்களில் நாங்கள் சரிவர விளையாடமல் இருந்ததுடன், எதிரணி வீராங்கனைகள் எங்களை அழுத்தத்தில் தள்ளினர். அந்த இடத்தில் தான் நங்கள் இந்த போட்டியை எங்கள் கைகளில் இருந்து நழுவவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.