ENG vs WI: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Wed, Jul 17 2024 22:45 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார். 

இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேக் பிராத்வைட் தலைமையிலான இந்த அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப்பும் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேயிங் லெவன்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா (வாரம்), குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், சோயிப் பஷீர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை