WI vs BAN, 1st Test: 103 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்; விண்டீஸ் அபாரம்!

Updated: Fri, Jun 17 2022 12:27 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நார்த்சவுண்டில் தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோரைத் தவிர வேறுயாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் ரன் சேர்க்கவில்லை.

இதனால் 32.5 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் காம்பெல் 24 ரன்களிலும், ரெமன் ரெய்ஃபெர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இதனால் முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் பிராத்வெயிட் 42, போனர் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::