சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஷமார் ஜோசப்!

Updated: Sat, Jun 28 2025 15:52 IST
Image Source: Google

Shamar Joseph Record: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 10ஆவது வரிசையில் பேட்டிங் செய்து அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப் படைத்துள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையிலும், 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரைசதங்களின் காரணமாக 310 ரன்களைச் சேர்த்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றர். 

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் தனது அற்புதமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். அந்த்வகையில் ஷமார் ஜோசப் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 25.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்ன்மூலம் அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் மூன்றாவது முறையாக இந்த சாதனையை செய்துள்ளர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் உலகின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் டாம் ரிச்சர்ட்சன், பிராங்க் பாஸ்டர், சார்லி லெவெலின், ஃபசல் மஹ்முத் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். னர்.

Also Read: LIVE Cricket Score

அதேபோல் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 10ஆவது இடத்தில் பேட்டிங் செய்த ஷமார் ஜோசப் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10ஆவது இடத்தில் பேட்டிங் செய்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக முகமது ஷமி, ட்ரென்ட் போல்ட், டிம் சௌதீ, லசித் மலிங்கா, முத்தையா முரளிதரன் ஆகியோர் தலா 3 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

  • 4* – ஷமர் ஜோசப், பிரிட்ஜ்டவுன், 2025
  • 3 – முகமது ஷமி, நாக்பூர், 2023
  • 3 – டிரென்ட் போல்ட், வெலிங்டன், 2016
  • 3 – டிம் சவுத்தி, வெலிங்டன், 2016
  • 3 – லசித் மலிங்கா, ஹோபார்ட், 2007
  • 3 – முத்தையா முரளிதரன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::