அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!

Updated: Mon, Apr 11 2022 19:33 IST
Image Source: Google

வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. துபையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்களில் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். 

அதேபோல் தொடரை நடத்தும் நாடுகளான அமெரிக்காவும், வெஸ்ட் இண்டீஸும் நேரடித் தகுதியை அடைந்துள்ளன.  மீதமுள்ள இரு அணிகள், தரவரிசையின் அடிப்படையில் தேர்வாகும். 

ஒருவேளை வெஸ்ட் இண்டீஸி அணி முதல் 8 இடங்களில் இடம்பெற்றுவிட்டால், தரவரிசையின் அடிப்படையில் மூன்று அணிகள் தேர்வு செய்யப்படும். இதர 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::