WI vs AUS, 3rd ODI : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Jul 26 2021 15:20 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகள்  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 26) பார்போடாஸில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

போட்டி தகவல்கள் 

  •         மோது அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
  •         இடம் - பிரிட்ஜ்டவுன், பார்போடாஸ்
  •         நேரம் - நள்ளிரவு 12 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி

கிரோன் போல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைத் தழுவியது. 

இருப்பினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால், வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. 

இதனால் இன்றைய போட்டியிலும் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி

அலெக்ஸ் கேரி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் சொதப்பியது.

டெய் எண்டர்களைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதே இத்தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும் அவர்களிடம் அதிரடியான பேட்டிங் வரிசையும், பந்துவீச்சாளர்களும் இருப்பதால் அந்த அணி நிச்சயம் வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 142
  •     வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 61
  •     ஆஸ்திரேலிய வெற்றி - 75
  •     முடிவில்லை - 6

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ்- ஷாய் ஹோப், எவின் லூயிஸ், ஜேசன் முகமது, கீரோன் பொல்லார்ட்(கே), டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், அல்ஸாரி ஜோசப்

ஆஸ்திரேலியா -மேத்யூ வேட், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மொட், மிட்செல் மார்ஷ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (கே), ஆஷ்டன் டர்னர், வெஸ் அகர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்/ ரிலே மெரிடித்.

ஃபேண்டஸி லெவன்

  •         விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், அலெக்ஸ் கேரி
  •         பேட்ஸ்மேன்கள் - கீரோன் பொல்லார்ட், எவின் லூயிஸ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
  •         ஆல்ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், மிட்செல் மார்ஷ்
  •         பந்து வீச்சாளர்கள் - ஹேடன் வால்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை