நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!

Updated: Mon, Jul 25 2022 11:10 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இன்டீஸில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்து அசத்தியது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஷாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த இந்த சதத்தில் மிகச் சிறப்பான பல சாதனைகள் மறைந்துள்ளன.

அதன்படி நேற்றைய போட்டி அவருக்கு நூறாவது ஒருநாள் போட்டியாக அமைந்த வேளையில் நூறாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் தற்போது சாய் ஹோப் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணி சார்பாக கிறிஸ் கெயில் மற்றும் சர்வான் போன்றோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தாங்கள் விளையாடிய நூறாவது போட்டியில் சதம் அடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு நூறாவது ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்(115) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சர்வான்(115) ஆகியோருடன் நான்காவது இடத்தினை சாய் ஹோப்(115) பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை