பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணியும் சில நாள்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பார்போடாஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்
  • இடம் - கிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட்  இண்டீஸ் அணி

கீரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உத்தவேகத்துடனும், டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் முனைப்போடும் இப்போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

அதிலும் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன், ரஸ்ஸல் என அதிரடி வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருவதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என கருத்தப்படுகிறது.

அதேசமயம் பந்துவீச்சிலும் ஷெல்டன் காட்ரெல், டுவைன் பிராவோ, ஹெய்டன் வால்ஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி

Advertisement

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது.

இதனால் இத்தொடரையாவது கைப்பற்ற வேண்டுமென்ற உத்வேகத்துடன் அந்த அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருடன், முகமது ஹபீஸ், ஃபகர் ஸமான் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

பந்துவீச்சில் ஹசன் அலி, சாஹீத் அஃப்ரிடி ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருவது அணியின் நம்பிக்கையை அதிரிகரித்துள்ளது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 14
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 3
  • பாகிஸ்தான் வெற்றி -11

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ் - எவின் லூயிஸ் / லென்டல் சிம்மன்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், சிம்ரான் ஹெட்மையர், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், கெவின் சின்க்ளேர், ஹேய்டன் வால்ஷ், ஓபட் மெக்காய், ஷெல்டன் காட்ரெல்.

Advertisement

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), சோஹைப் மக்சூத், முகமது ஹபீஸ், ஃபகர் ஸமான், சதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதிர், ஹரிஸ் ரவூப்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - சோஹைப் மக்சூத், பாபர் அசாம், லென்டல் சிம்மன்ஸ், கீரோன் பொல்லார்ட்
  • ஆல்ரவுண்டர்கள் - சதாப் கான், இமாத் வாசிம், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்து வீச்சாளர்கள் - ஹரிஸ் ரவூப், ஹேய்டன் வால்ஷ், ஒபேட் மெக்காய்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News