UAE v WI, 2nd ODI: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!

Updated: Wed, Jun 07 2023 11:10 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி  வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய பிர்ண்டன் கிங் மற்றும் சார்லஸ் அருமையாம தொடக்க அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் பிரண்டன் கிங் 64 ரன்னும், சார்லஸ் 63 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் 20 ரன்களிலும், கேசி கார்டி 32 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 7 ரன்களிலும், கேப்டன் ஷாய் ஹோப் 23 ரன்னிலும், ஹாட்ஜ் 26 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுஏஇ அணி தரப்பில் ஜாகூர் கான் 3 விக்கெட்டும், அலி நசீர், சன்சித் சர்மா, அப்சல் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி விளையாடி வருகின்றன.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அணியில் முகமது வசீம், அர்யான்ஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, விரித்யா அரவிந்த்  36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த லவ்ப்ரீத் சிங், ஆசிஃப் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 95 ரன்களிலேயே யுஏஇ அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த பசில் ஹமீத் - அலி நேசர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அலி நேசர் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பசில் ஹமீத் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை