தீபக் ஹூடாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை - ஸ்ரீகாந்த் காட்டம்!

Updated: Sat, Jul 30 2022 17:17 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதம் (64) மற்றும் தினேஷ் கார்த்திக்கின் காட்டடி ஃபினிஷிங் (19 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது.

191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸை 122 ரன்களுக்கு சுருட்டி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணி தேர்வை விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

விராட் கோலி இந்த தொடரில் ஆடாததால், 3ஆம் வரிசையில் தீபக் ஹூடா - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில், முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இறக்கப்பட்டார். ஆனால் 4 பந்தில் ரன்னே அடிக்காமல் அவர் ஆட்டமிழந்தர்.

தீபக் ஹூடா இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அசத்தியிருக்கிறார். அண்மையில் டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 விதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடியிருக்கிறார். அப்படியிருக்கையில், அவரை புறக்கணித்துவிட்டு, ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்த்ததை கடுமையாக சாடியுள்ளார் ஸ்ரீகாந்த்.

இதுகுறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “ஹூடா எங்கே..? டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 விதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் செய்துள்ளார். அவரை கண்டிப்பாக அணியில் சேர்த்திருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் கண்டிப்பாக ஆடுவது அவசியம். 

பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் அல்லது பவுலிங் ஆல்ரவுண்டர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகமொத்தத்தில் ஆல்ரவுண்டர்கள் ஆடவேண்டும். அதிகமான ஆல்ரவுண்டர்கள் அணியில் இருப்பது பலம்சேர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை