ஐபிஎல் மெகா ஏலம் 2022: யார் இந்த அபினவ் சட்ரங்கனி?

Updated: Sat, Feb 12 2022 22:36 IST
Image Source: Google

சையது முஷ்டாக் அலி தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடியவர் அபினவ் சட்ரங்கனி. இவர் காலிறுதிக்கு முதல் சுற்றில் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்துள்ளார். காலிறுதியில் 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்துள்ளார். அரையிறுதியில் 13 பந்துகளில் 27 ரன்களும், இறுதிப் போட்டியில் 37 பந்துகளில் 46 ரன்களும் அடித்துள்ளார்

நடுவரிசையில் பேட்டிங் செய்யும் அபினவ் சட்ரங்கனி ஹர்திக் பாண்டியா போல் அதிரடியாக ஆடக்கூடியவர். சுழற்பந்தும் வீசுவார் . இதனையடுத்து அவர் பெயர் ஐபிஎல் தொடரில் ஏலத்திற்கு வந்ததும் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடுமையாக மோதினர்.

கடைசியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி அபினவ்வை ஏலத்தில் எடுத்தது. இதனை தொடர்ந்து அபினவ் யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை