பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கபடுதற்கான காரணம்!

Updated: Sat, Dec 25 2021 14:22 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்கும் டெஸ்ட் போட்டி  பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய காமன்வெல்த் நாடுகளிலும் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் மெல்போர்ன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் மற்றும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளாக நடத்தப்படுகின்றன.

டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தை பார்ப்போம். பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த ”பாக்ஸிங் டே” உருவானது. இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு பாரிசுகளை பெட்டியில் வைத்து வழங்குவர். இந்த தினத்தில் ஊழியர்களுக்கு அவர்களது எஜமானர்களிடமிருந்து கிறித்துமஸ் பரிசு பெட்டிகள் கிடைக்கும். 

இந்த பாக்ஸிங் டே உருவானதில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் பங்கு உண்டு. ஆண்டு முழுவதும் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் பணம் பெற்று கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி ஏழைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அதனால் தான் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை