WI vs AUS, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்

Updated: Thu, Jul 22 2021 12:37 IST
Image Source: Google

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி நேற்று முந்தினம் நடைபெற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 22) பார்போடாஸில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

போட்டி தகவல்கள் 

  •     மோது அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
  •     இடம் - பிரிட்ஜ்டவுன், பார்போடாஸ்
  •     நேரம் - நள்ளிரவு 12 மணி

போட்டி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி

கிரோன் போல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் ஒருநாள் தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைத் தழுவியது. 

அதிலும் கேப்டன் கிரேன் பொல்லார்டைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் தங்களது பேட்டிங் திறனை வெளிப்படுத்தாததே அந்த அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தது. 

இதனால் முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிபெரும் முனைப்போடு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி

அலெக்ஸ் கேரி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. 

அணியின் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து தரப்பிலும் ஆஸ்திரேலிய அணி வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி தொடரை வெல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

    மோதிய ஆட்டங்கள் - 141
    வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 60
    ஆஸ்திரேலிய வெற்றி - 75
    முடிவில்லை - 6

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ்- ஷாய் ஹோப், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மையர், கீரோன் பொல்லார்ட்(கே), டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், அல்ஸாரி ஜோசப்

ஆஸ்திரேலியா -மேத்யூ வேட், ஜோஷ் பிலிப், மிட்செல் மார்ஷ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (கே), ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, ஆஷ்டன் அகர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், அலெக்ஸ் கேரி
  •     பேட்ஸ்மேன்கள் - எவின் லூயிஸ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
  •     ஆல்ரவுண்டர்கள் - ஃபேபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர், மிட்செல் மார்ஷ்
  •     பந்து வீச்சாளர்கள் - ஷெல்டன் கோட்ரெல், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை