WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பல்வேறு அணிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியும் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக 24 பேர் அடங்கிய ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் பயோ பபுள் சூழல் காரணமாக முன்னணி வீரர்கள் டேவிட் வார்ன, மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஸ்மித், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சம்ஸ் என ஏழு பேர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு மாற்று வீரராக நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான 20 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி தனி விமானம் மூலம் இன்று வெஸ்ட் இண்டீஸ் சென்று, செயிண்ட் லூசியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஒருவார கால தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடர் ஜூலை 10ஆம் தேதி தொடங்கி ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய டி20 & ஒருநாள் அணி: ஆரோன் பிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், வெஸ் அகர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, டேனியல் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மொட், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை , மத்தேயூ வேட், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா.