வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
- இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதுகிறது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால், ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்ற பிரைன் லாரா மைதானத்தில் தான், முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீசில் தான் நடைபெற உள்ளது.
இதனால் , இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு , அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்கலாம். இந்த நிலையில், டி20 தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், 4ஆவது வீரராக சூர்யகுமார் யாதவும் விளையாட கூடும்.
5ஆவது இடத்தில் திலக் வர்மாவும், 6ஆவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்க கூடும். 7ஆவது இடத்தில் அக்சர் பட்டேலுக்கும், 8ஆவது இடத்தில் சாஹலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவருவதாகவே உள்ளது. ஏனெனில் எந்த நேரத்திலும் அதிரடியை வெளிப்படுத்தும் விரர்கள் அணியில் இருப்பது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மன் பாவேல் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன், ஒபேத் மெக்காய், ஒஷேன் தாமஸ் ஆகியோரும் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -25
- வெஸ்ட் இண்டீஸ் - 07
- இந்தியா - 17
- முடிவில்லை -01
உத்தேச லெவன்
வெஸ்ட் இண்டீஸ்: பிரெண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்ல்ஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் (கே), ரோமரியோ ஷெஃபர்ட், ஜெசன் ஹோல்டர், அகில் ஹுசைன், அல்ஜாரி ஜோஸப்.
இந்தியா : ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலகம் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், முகேஷ் குமார், யுஜவேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), இஷான் கிஷன்
- பேட்ஸ்மேன்கள்- சூர்யகுமார் யாதவ், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுப்மான் கில்
- ஆல்ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா (கே), கைல் மேயர்ஸ்
- பந்துவீச்சாளர்கள்- குல்தீப் யாதவ், அல்ஜாரி ஜோசப்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.