WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; பின்னடைவை சந்தித்த விண்டீஸ்!

Updated: Sat, Jul 22 2023 21:32 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்களையும், ரோஹித் சர்மா 80 ரன்களயும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரேக் பிராத்வைட் - டெக்நரைன் சந்தர்பால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டெக்நரைன் சந்தர்பால் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த மெக்கன்ஸி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் 37 ரன்களுடனும், மெக்கன்ஸி 14 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்கன்ஸி 32 ரன்கள் எடுத்த நிலையில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். 

அச்சயம் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேப்டன் கிரேக் பிராத்வைட 49 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை