WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Jul 31 2023 22:38 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இதையடுத்து 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை நடக்கிறது. டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இந்திய அணி கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட வெஸ்ட் இண்டீஸ்யிடம் ஒரு நாள் தொடரை இழந்தது இல்லை. இந்த சோகமான சாதனையை மாற்றும் நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் உள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது இந்திய அணிக்கு மைனஸ் பாயிண்டாக இருந்தது.

இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் பிளேயிங் லெவனில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளைய ஆட்டத்தில் யார் இடம் பெறுவார்? யார் அணியை விட்டு செல்வார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டதால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் உம்ரான் மாலிக், சர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுவருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் நாளையும் விளைாயடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. அணியின் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மையர், கேசி கார்டி ஆகியோர் உள்ளனர். 

பந்துவீச்சில் அல்ஸாரி ஜோஸப், ஒஷேன் தாமஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், டோமினிக் டார்க்ஸ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 141
  • வெஸ்ட் இண்டீஸ் - 64
  • இந்தியா - 71
  • முடிவில்லை - 06

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், கேசி கார்டி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், யானிக் கேரியா, அல்ஸாரி ஜோஸப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்

இந்திய அணி: இஷான் கிஷன், ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள்- கேசி கார்டி, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள்- குல்தீப் யாதவ் (துணை கேப்டன்), குடாகேஷ் மோதி, ஷர்துல் தாக்கூர், அல்சாரி ஜோசப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை