WI vs PAK, 1st Test: சீல்ஸ் பந்துவீச்சால் திணறிய பாகிஸ்தான்; இந்தீஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்களுக்கு இன்னிங்ஸை நிரைவுசெய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அணியின் கேப்டன் பாபர் அசாம் மட்டும் நிலைத்து நின்று அரைசதமடித்தார்.
இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 203 ரன்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், கீமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 4ஆம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.