WI vs SA, 2st T20: பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்கா; வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி!

Updated: Mon, Jun 28 2021 09:17 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரீசா ஹெண்ட்ரிக்ஸ் - டி காக் இணை அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 

பின் 26 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, 42 ரன்களில் ஹெண்ட்ரிக்ஸும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் பவுமா 46 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஒபேட் மெக்காய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர்கள் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரஸ்ஸல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே பிளட்சர் 35 ரன்களிலும், ஃபாபியன் ஆலன் 34 ரன்களையும் சேர்த்து நம்பிக்கையளித்தனர். ஆனாலும் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலையில் முடித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை