தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய ஹென்ரிச் கிளாசென்!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்று. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை சமன்செய்யும்.
இதன் காரணமாக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் தங்கள் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஹென்ரிச் கிளாசென், “தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நாங்கள் இருக்கும் இடத்தின் இயல்பு இதுதான். இனி நாங்கள் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மாட்டோம்.
ஏனெனில் நீங்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும், பின்னர் ஞாயிற்றுக்கிழமை மற்றொரு ஆட்டத்தை நடத்துவோம். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில்ந் நாங்கள் விளையாடுவோம். எங்கள் டெஸ்ட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது, இது என் பார்வையில் அபத்தமானது. இது ஏமாற்றமளிக்கிறது, மேலும் இது அணி வீரர்களுக்கு நல்லதல்ல.
ஏனென்றால் அவர்களுக்கு எதிராகவும் மற்ற நாடுகளுக்கு எதிராகவும் நாங்கள் அதிக கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம், ஆனால் நாங்கள் எப்போதும் அந்த அணிக்ளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று போட்டிகளை மட்டுமே விளையாடுவதற்கான வழியைக் காண்கிறோம், அது வருத்தமாக இருக்கிறது. அதனால் இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், அண்டில் சிமெலேன், லூத்தோ சிபம்லா (3ஆவது மற்றும் 4ஆவது டி20), மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.