லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!

Updated: Mon, Jan 20 2025 20:37 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது சமீபத்தில்சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 

அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. 

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கோப்பையை வெல்வதற்காக என்னுடைய 200 சதவீத உழப்பை கொடுப்பேன் என்று தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “என் மீது நம்பிக்கை வைத்ததற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகத்திற்கு என்னுடையை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எனது 200 சதவீத உழைப்பை உங்களுக்கு வழங்குவேன், அதுதான் எனது உறுதிமொழி. நீங்கள் காட்டிய நம்பிக்கைக்கு என்னால் ஈடுசெய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன்.புதிய ஆற்றலுடன் ஒரு புதிய தொடக்கத்தைக் காணவும், அங்கு மகிழ்ச்சியுடன் வாழவும், நிறைய வேடிக்கைகளைக் காணவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான ரிஷப் பந்த் இதுவரை 111 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 18 அரைசதங்களுடன் 3284 ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது தலைமையில் லக்னோ அணி சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Also Read: Funding To Save Test Cricket

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப்,  ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கீ.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை