இளம் வயதில் ஓய்வை அறிவித்த ஆஸி,யின் வில் புக்கோவ்ஸ்கி - காரணம் என்ன?

Updated: Thu, Aug 29 2024 20:42 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 26 வயதான வில் புக்கோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டார். மேலும் அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இடத்தை நிரப்பும் வீரர்களில் ஒருவராகவும் வில் புக்கோவ்ஸ்கி இருந்து வந்தார். இதனால் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தலையில் பந்து தாக்கியதன் காரணமாக தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சூழல் உருவாகியுள்ளது. அதன்படி தற்சமயம் நடைபெற்று வரும் ஒரு பயிற்சி ஆட்டத்தின்போது, வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்தனது வில் புக்கோவ்ஸ்கி தலையில் பன்பயங்கரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவ பரிசோதனையின் முடிவில் வில் புக்கோவ்ஸ்கி பந்து தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மருத்து காரணங்களால் வில் புக்கோவ்ஸ்கி தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட வீரர் ஒருவர் திடீரென மருத்துவ காரணங்களால் ஓய்வை அறிவித்துள்ள நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::