இனி ரஹானே, புஜாராவின் நிலை என்ன - விராட்டின் பதில்

Updated: Fri, Jan 14 2022 20:32 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக புஜாரா மற்றும் ரஹானேவின் பேட்டிங் சொதப்பல் தான் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரஹானே, புஜாராவின் எதிர்காலம் குறித்து இப்போது என்னால் எதும் சொல்ல முடியாது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் சொதப்பலே காரணம். குறிப்பாக சீனியர்கள் ரன் அடிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

ரஹானே, புஜாராவின் செயல்பாடு குறித்து தேர்வுக்குழுவிடம் பேச உள்ளேன். அதில் தான் இருவர் குறித்தும் முடிவு எடுக்கப்படும். மற்ற படி, புஜாரா, ரஹானே ஆகியோர் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்துள்ளனர். அதையும் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த கோலி, ராகுலையும், ரிஷப் பந்தையும் வெகுவாக பாராட்டினார்.

இந்திய அணி அடுத்தது மார்ச் மாதம் இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ரஹானே, புஜாரா களமிறங்குவார்களா இல்லை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று அப்போது தான் தெரியும். ஆனால், பிசிசிஐ வட்டாரத்தில் இருவருக்கும் அடுத்த தொடரில் பங்கேற்க வாய்ப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை