ரோஹித், ஹர்திக் அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் - ஜெயவர்த்தனே பதில்!

Updated: Mon, Sep 20 2021 15:22 IST
Image Source: Google

அமீரகத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் கலந்துகொள்ளவில்லை. 
இதனால் பொலார்ட், மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த போட்டியில் விளையாடுவார்களாக என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதையடுத்து இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறுகையில், “ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் மற்றும் ஓட்டம் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இங்கிலாந்திலிருந்து தற்போதுதான் அவர் திரும்பியதால் மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவை என நினைத்தோம். எனவே அடுத்த ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பாண்டியா பயிற்சி எடுத்துக்கொண்டார். அதில் அவருக்கு லேசாக வலி ஏற்பட்டதால் சில நாள்கள் அவகாசம் அளித்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னை இல்லை. எனினும் பாண்டியா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் தான்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::