வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முனீப் அலி, ஆயிஷா ஸாஃபர், ஜவெரியா கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஒமைமா சொஹைல் - நிடா தார் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிடா தார் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஒமைமா சொஹைல் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த சொஹைல் 62 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 49 ஓவர்களிலேயே பாகிஸ்தான் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் அனிசா முகமது, ஹென்ரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.