WIW vs SAW: மழையால் தடைபட்ட முதல் டி20!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸிலில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 135 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக காப் 3 ரன்களையும், வால்வார்ட் 35 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் ஹேலீ மேத்யூஸ் 8 ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார். பின் அந்த அணி 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
பிறகு தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆண்டிகுவாலில் நடைபெறுகிறது.