மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

Updated: Thu, Jul 13 2023 13:10 IST
Womens Ashes 2023: England pulled off a record run chase in the first Ashes ODI against Australia! (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலிசா ஹீலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்ச்ஃபீல்ட் 34 ரன்களுக்கும், எல்லீஸ் பெர்ரி 41 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய பெத் மூனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பெத் மூனி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் ஜெஸ் ஜோனசன் 30 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியிலும் தொடக்க வீராங்கனை ஷோபிய டங்க்லி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடிசேர்ந்த டாமி பியூமண்ட் - அலிஸ் கேப்ஸி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பியூமண்ட் 47 ரன்களுக்கும், கேப்ஸி 40 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க, மறுபக்கம் நாட் ஸ்கைவர் 31 ரன்களிலும், டேனியல் வையட், எமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கேப்டன் ஹீதர் நைட், 75 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை