Women's CWC 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச அணி!

Updated: Sat, Mar 05 2022 16:36 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி மவுன்ட் மாங்குனியில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - மவுண்ட் மாங்குனி, நியூசிலாந்து
  • நேரம் - காலை 6.30 மணி

போட்டி முன்னோட்டம்

அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. 

இதனால் இப்போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அளவுக்கு தரமான வீராங்கனை கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த போதிலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 10
  • இந்தியா வெற்றி - 10
  • பாகிஸ்தான் - 0

உத்தேச அணி

இந்திய அணி -ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, மிதாலி ராஜ் (கே), ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், ஜூலன் கோஸ்வாமி, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.

பாகிஸ்தான் - நஹிதா கான்/சித்ரா அமீன், முனீபா அலி, ஜவேரியா கான், ஒமைமா சோஹைல், பிஸ்மா மரூஃப் (கே), நிடா தார், அலியா ரியாஸ், பாத்திமா சனா, டயானா பைக், நஷ்ரா சந்து, அனம் அமீன்/ஐமன் அன்வர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை