மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சோஃபியா டிவைனின் அதிரடியான ஆட்டத்தினால் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சோஃபிய டிவைன் 93 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு அரைசதம் கடந்தனர்.
இருப்பினும் வோல்வார்ட் 67 ரன்களிலும், சுனே லூஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மீதமிருந்த நிலையில் கடைசி ஓவரில் இலக்கை எட்டி, நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.