நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சோஃபிய டிவைன் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அமிலிய கெர் - ஏமி சதர்வைட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின் அமிலிய கெர் 50 ரன்களிலும், ஏமி சதர்வைட் 75 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.