WPL 2023: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!

Updated: Tue, Feb 14 2023 21:44 IST
Image Source: Google

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. 

மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வாகியுள்ளார். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது டபிள்யுபிஎல்-இன் அட்டவணை வெளியாகியுள்ளது. 

 

அதன்படி முதல் போட்டி  மார்ச் 4ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.  இதில் குஜராத் ஜெயண்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. கடைசி லீக் போட்டி மார்ச் 21ஆம் தேதியும், அரையிறுதிப் போட்டி மார்ச் 24ஆம் தேதியும் மற்றும் இறுதிப் போட்டி மார்ச் 26ஆம் தேதியும் நடக்க உள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை