மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள மலேசியா மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய நன்ஃபட் சௌஹான் ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான பூச்சாதமும் 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கோஞ்சரோன்கை ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் திபட்சா புத்தாவோங் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஞ்சரோன்கை 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மாயா 29 ரன்களை சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சோற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவிக் தாய்லாந்து அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. மலேசியா அணி தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மலேசிய அணிக்கு கேப்டன் வினிஃப்ரெட் துரைசிங்கம் - வான் ஜூலியா இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் வினிஃபரெட் துரைசிங்கம் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்ஸா ஹண்டர் 9 ரன்களிலும் இஸ்மாயில் ரன்கள் ஏதுமின்றியும், ஹஷிம் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வான் ஜூலியா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

பின் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்த நிலையில் வான் ஜூலியாவும் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மலேசிய அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் மலேசிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தாய்லாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் மலேசிய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரையும் மலேசிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News