மகளிர் ஆசிய கோப்பை: இந்திய பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை!

Updated: Sat, Oct 15 2022 14:38 IST
Image Source: Google

எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்  தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரையிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் (இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக) 3-வது இடம் பெற்றது. அந்த அணி அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பழிதீர்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 8 ரன்னிலும், சஞ்சீவினி ஆகியோர்  ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் ரேனுகா சிங, ஸ்நே ராணா ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதியில் இனோகா ரனவீரா 18 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகலை இழந்து 65 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளையும், ராஜெஷ்வரி கெய்க்வாட், ஸ்நே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை