மகளிர் டி20 சேலஞ்ச்: மேகனா, ரோட்ரிக்ஸ் அதிரடி; வெலாசிட்டிக்கு 191 டார்கெட்!
மகளிர் டி20 சேலஞ்ச் தொட்ரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெலாசிட்டி - டிரெயில்பிளேசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டிரெயில்பிளேசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மேகனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடியா மேகனா அரைசதம் கடக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜொமிமா ரோட்ரிக்ஸும் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
அதன்பின் 73 ரன்கள் சேர்த்திருந்த மேகனா ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹீலே மேத்யூஸ் 27 ரன்களையும், சோஃபியா டாங்க்லி 19 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டிரெயில்பிளேசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்தனார். மேலும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் வரலாற்றி அடிக்கப்பட்ட ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.
இதையடுத்து வெலாசிட்டி அணி இப்போட்டியில் 160 ரன்களையாவது கடந்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் விளையாடவுள்ளது.