மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
எட்டாவது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் வோல்வார்ட் 19 ரன்களிலும், டஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் சுனேஎ லூஸ் 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகளான பெத் மூனி 20, எல்லிஸ் பெர்ரி 11, மெக் லெனிங் ஒரு ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தான்னர். பின்னர் களமிறங்கிய தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் 33 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 57 ரன்களைச் சேர்த்து தஹிலா மெக்ராத் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய மகளிர் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.