இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!

Updated: Fri, May 14 2021 11:39 IST
Image Source: Google

கடந்த மார்ச் மாதம் புனே மைதானத்தில் இந்திய -இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடது முழங்கையில் காயமடைந்தார். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தாக வேண்டும் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் ஐயர், தற்பொழுது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட போவதில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பொதுவாக 3 முதல் 5 மாதங்கள் ஒரு வீரருக்கு ஓய்வானது தேவைப்படும். அதன்படி பார்க்கையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்பொழுது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவர் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி வலை பயிற்சியை மேற்கொண்டு, மீண்டும் விளையாடும் தகுதியுடன் திரும்ப வேண்டும். அதற்குப் பின்னர்தான் இந்திய அணியில் அவர் பழையபடி விளையாட முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

ஐயர் நிச்சயமாக இந்திய அணிக்காக உலக கோப்பை டி20 தொடரில் விளையாட போகிறார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயமாக அவருக்கான ஓய்வு தற்போது தேவைப்படுகிறது. இந்த ஓய்வு காலத்தில் அவர் மீண்டும் பழையபடி திரும்பி வரவேண்டும். எனவேதான் அவரை இலங்கைக்கு எதிரான தொடரில் நடக்கவில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்திய சீனியர் வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியிலும் அவர்கள் விளையாட இருக்கின்றனர்.

எனவே முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு அணியை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா மற்றும் சஹால் ஆகியோருடன் இளம் வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அண்மையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அணையை ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை