தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!

Updated: Thu, Sep 28 2023 22:09 IST
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. முன்னதாக உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. அதன்படி நாளை முதல் பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ளன.

அதேசமயம் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது போன்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதில்  உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறாத தென் ஆப்பிரிக்க அணியின் மீதும் ஒருசிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். 

அதற்கேற்றவாரு சமீபத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரையும் வென்று புது தெம்புடன் அந்த அணி இத்தொடரை எதிர்கொள்ளவ்ள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய காகிசோ ரபாடா, “தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். 

உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக் கோப்பை சவாலானதாக இருக்கப் போகிறது. ஆனால், போட்டிகள் உண்மையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமையப் போகிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை