உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஆதிக்கத்தைத் தொடங்கிய இந்தியா!
முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வென்றது. அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.
இதில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தான் முதல் டெஸ்ட் தொடர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 50% வெற்றி விகிதத்தை பெற்றுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி 54.17 வெற்றி விகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
தலா 50 வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 2 மற்றும் 3ஆம் இடத்தில் உள்ளன. மேலும் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து அணி 29.17 வெற்றி விகிதத்துடன் நாம் இடத்தைப் பிடித்துள்ளது.