உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி!
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி தனிமைப்படுதல் காலத்தை முடித்து, இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உற்சாகத்துடன் உள்ளது.
உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் கடும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் வலைபயிற்சி ஈடுபடும் காணொளியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பிசிசிஐயின் இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.