வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம் - பாபர் ஆசாம்!
ஆசியக் கோப்பை 2022இன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் குஷல் மெண்டிஸ் 0, நிஷங்கா 8 ஆகியோர் சொதப்பினர். மற்ற டாப் வரிசை வீரர்களும் சொதப்பியதால் இலங்கை அணி 58 எனத் திணறியது. அடுத்து ராஜபக்சா 71 காட்டடி அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹசரங்கா 36 ரன்களை சேர்த்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்களை எடுத்தது.
அதன்பின்இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர் முகமது ரிஸ்வான் 55 , இஃப்திகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். பாபர் அசாம் 5 உட்பட மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது.
இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. இலங்கை தரப்பில் மதுஷன் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 ஆகியோர் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்கள்.
இப்போட்டியில் தோற்ற பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ‘‘இலங்கை அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் 8 ஓவர்களின்போது நாங்கள் இலங்கை அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினோம். அடுத்து ராஜபக்சா, ஹசரங்கா பார்ட்னர்ஷிப் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
மேலும் 15-20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டோம். அதேபோல் பீல்டிங்கும் திருப்திகரமாக இல்லை. வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது’’ என தெரிவித்தார்.