WPL 2023 Final: பந்துவீச்சில் மிரட்டிய மும்பை; இறுதியில் அதிரடி காட்டிய ஷிகா, ராதா!

Updated: Sun, Mar 26 2023 21:13 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ஹர்மன்பரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனார். 

ஆனால் அவரது அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஸி வாங் விசிய முதல் ஓருவரில் அடுத்தடுத்து சிக்சரும் பவுண்டரியும் விளாசிய அவர், 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அலிஸ் கேப்ஸியும் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமற்றமளித்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களிலும், மரிசேன் கேப் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் மெக் லெனிங் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய ஜெஸ் ஜோனசென், மினு மணி, தனியா பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து ஹெய்லி மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷிகா பாண்டே யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அசத்தினார். அவருடன் இணைந்த ராதா யாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 52 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகா பாண்டா 17 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்களையும் சேர்த்தனர். 

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹெய்லி மேத்யூஸ், இஸி வாங் தலா 3 விக்கெட்டுகளையும் மெலி கெர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை