எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!

Updated: Wed, Feb 28 2024 14:33 IST
எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி! (Image Source: Google)

மகளீர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறத்து. நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

இதில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன் ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கி புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு சீசனிலும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதனால் நடப்பு சீசனில் அந்த அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலிரண்டு போட்டிகளிலேயே தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பும் வீரர்களுக்கு வாய்ப்புகளை அந்த அணி கொடுத்து வருவதே தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தொடர்ந்து சொதப்பும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும் அதிரடி வீராங்கனையுமான லாரா வோல்வார்ட்டிற்கு பிளேயிங் லெவனில் இடம் தராதது கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த போட்டிகளுக்கான தேர்வில் லாரா வோல்வார்ட் எங்கள் அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என அந்த அணி கேப்டன் பெத் மூனி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பெத் மூனி, ஒரு குறுகிய தொடரில் உங்கள் அணியின் பிளேயிங் லெவனை மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதன் காரணமாகவே லாரா வோல்வார்ட்டை நாங்கள் வெளியே அமர்த்தியுள்ளோம். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதை நீங்கள் பார்க்கலாம். ஏனேனில் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் அவரது வருகை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.

முன்னதாக இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை லாரா வோல்வார்ட்டும் எங்களது பிளேயிங் லெவன் தேர்வில் இருந்தார். மேலும் அதுதான் எங்களது சிறந்த பிளேயிங் லெவன் என்றும் நினைத்தோம். ஆனால் அதன்பின் நாங்கள் அதனை மாற்றியதற்கு சில காரணங்கள் உள்ளன. ஏனெனில் உங்கள் அணியில் உள்ள வீராங்கனைகளுக்கும் நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையெனியில் தொடர் முழுவது நீங்கள் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் மார்ச் 01ஆம் தேதி யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் லாரா வோல்வார்ட்டிற்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை