மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. இதில் இன்று நடைற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஹர்லீஜ் தியோல் - கேப்டன் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 8 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்களிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப நிலையில், மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ஹர்லீன் தியோல் 22 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுக்கும், கேத்ரின் பிரைஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த தயாளன் ஹேமலதா - ஸ்நே ராணா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 12 ரன்களை எடுத்திருந்த ஸ்நே ராணா தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தயாளன் ஹேமலதா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News