நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஆஷ்லே கார்ட்னர்!

Updated: Sat, Feb 15 2025 09:10 IST
Image Source: Google

மூன்றாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தில். வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், “இந்த மைதானம் பேட்டர்களுக்கு சாதமாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இங்கு 200 ரன்கள் என்பது ஒரு சமமான வெற்றி வாய்ப்பை உருவாக்கும் ஸ்கோராக இருந்தது. அதன் காரணமாக நங்கள் நன்றாக பந்து வீச வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் அது நடக்கவில்லை. நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டோம்.

இறுதியில் அது எங்களின் தோல்விக்கு முக்கிய காரண்மாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும் எப்போதும் நேர்மறையான விஷயங்கள் இருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. இப்போட்டியில் எங்கள் அணியின் பெத் மூனி மற்றும் டியாண்டிரா டோட்டின் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதனால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எட்டமுடிந்தது. 

ஆனால் நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம் ஆர்சிபி அணியின் ரிச்சா கோஷ் அபாரமாக பேட்டிங் செய்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும் பனியின் தாக்கம் இருந்ததால் பந்துவீச கடினமாக இருந்தது. அதனால் எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை. இருப்பினும் அதை ஒரு சாக்காக நான் இங்கு பயன்படுத்தப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் 201 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிஸர்கள் என 79 ரன்களையும், பெத் மூனி 56 ரன்களையும் சேர்த்தனர்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களையும், இறுதிவரை அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், கனிகா அஹுஜா 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை