கிரேஸ் ஹாரிஸ் ஒரு புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் - மிதாலி ராஜ் பாராட்டு!

Updated: Sun, Feb 23 2025 17:02 IST
Image Source: Google

மூன்றாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைச் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 2 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 62 ரன்களைக் குவித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஜெஸ் ஜோனசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடியா டெல்லி அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகாள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களில் ஆல் அவுட்டானது. 

யுபி வாரியர்ஸ் தரப்பில் கிராந்தி கவுட் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதன்படி இப்போட்டியில் அவர் தனது மூன்றாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம், டபிள்யூபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை மற்றும் இத்தொடரின் மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜும் கிரேஸ் ஹாரிஸுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கிரேஸ் ஹாரிஸ் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும், அவர் களத்தில் ஏதோ ஒன்றை செய்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டியிலும் கூட, அவர் முதல் ஓவரிலேயே மெக் லானிங்கை வீழ்த்தினார், இன்று அவர் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.

கடைசி ஓவரை அவர் வீசுவார் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் ஹாட்ரிக் எதிர்பாராதது. கிரேஸ் ஹாரிஸ் ஒரு விதிவிலக்கான புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர். அவர் தனது முதல் ஓவரிலேயே அன்னாபெல் சதர்லேண்டை வீழ்த்தினார், பின்னர், இன்னிங்ஸின் கடைசி ஓவரில், அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும் அவர் தனது திறனை உணர்ந்து பந்துவீச்சில் பல்வேறு மாறுபாடுகளை பயன்படுத்துகிறார். .

Also Read: Funding To Save Test Cricket

அவர் ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து பந்து வீசவில்லை என்றாலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் போதெல்லாம், அவர் முக்கியமான திருப்புமுனைகளை எற்படுத்தி வருகிறார். சினெல்லே ஹென்றி போன்ற பேட்ஸ்மேன்கள் முதல் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் கிராந்தி கவுட் போன்ற பந்து வீச்சாளர்கள் வரை அணி முழுவதும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  அதிலும் அந்த இரு பந்து வீச்சாளர்களும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்” என்று பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை