WTC Final: ‘இந்திய அணியின் தேர்வு சரியானதே’ - விரால் கோலி விளக்கம்

Updated: Thu, Jun 24 2021 16:56 IST
WTC Final: This was our best XI, says Kohli (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. 5 நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக 6ஆவது நாளான நேற்று ரிசர்வ் நாளில் முடிவுக்கு வந்தது. 

இத்தோல்வியை அடுத்து இந்திய அணியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்தது தவறு என்று பல்வேறு விமர்சனங்கள்  எழுந்தன. அதனை மறுக்கும் விதத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கோலி “போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக தடைப்பட்டது. பின்பு போட்டி 2 ஆம் நாளில் தொடங்கியபோது அன்றைய ஆட்ட நேர முடிவில் நாங்கள் 3 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தோம். ஆனால் அவ்வப்போது வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க முடியவில்லை. முழுமையாக நடந்திருந்தால் நாங்கள் இன்னும் நிறைய ரன்களை சேர்த்திருப்போம்.

இதுபோன்ற சீதோஷன நிலைக்கு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் இப்போதிருக்கும் இந்திய அணியை வைத்து நாங்கள் ஏற்கெனவே பல்வேறு நாடுகளுக்கு எதிராக வெற்றிப்பெற்று இருக்கிறோம். இதனால் எங்கள் பேட்டிங்கின் ஆழமும் அதிகரித்து இருக்கிறது. அதனால் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது சரியான முடிவுதான். போட்டியில் இன்னும் நிறைய நேரம் இருந்திருந்தால் சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் நிறைய விக்கெட்டுகளை எடுத்திருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை