ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!

Updated: Tue, Dec 06 2022 10:51 IST
WTC Points Table: How Pakistan's loss against England can be India's gain? (Image Source: Google)

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில் விளையாடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 72.73 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 60 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 52.33 சதவிகிதத்துடன் 3ஆம் இடத்தில் உள்ளது. இலங்கையை விட வெறும் 0.25 சதவிகிதம் மட்டுமே பின் தங்கி 4ஆம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதம் 46.67ஆக குறைந்துள்ளது. 

அதனால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மட்டும் தோற்று, மற்ற போட்டிகளில் வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை