171 ரன்களில் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்ட ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஓபனிங் செய்தனர். இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் அடித்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கி இருவரும் அரை சதம் கடந்தனர். அதன் பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி முதல் விக்கெட் இருக்கு இருநூறு ரண்களை கடந்தது. இதில் ஜெயஸ்வால் சதம் அடித்து பல சாதனைகளை தனது வசம் ஆக்கினார். தொடர்ந்து பேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 229 ரன்கள் குவித்தது ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆனார்.இருப்பினும் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஜெய்சுவால் இரண்டாம் நாள் முடிவில் 143 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களத்தில் இருந்தனர் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்த ஜோடி துவக்கம் முதலே அதனுடைய விளையாட வேண்டும் என்று முனைப்பு காட்டி விளையாடி வந்தது. 150 ரன்கள் கடந்த ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் 200 ரண்களை அடித்து பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது துரதிஷ்டவசமாக 171 ரன்களுக்கு அவுட் ஆனார் இதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.
அறிமுக டெஸ்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியளில் ஜெய்ஸ்வால் அடித்த 171 ரன்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இப்பட்டியளில் ஷிகர் தவான் 187 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 177 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.